சுடச்சுட

    


    குடியாத்தம் ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் காந்தி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஆர். மோகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வி. ராமு, எம்எல்ஏ ஜி.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பகுதியிலும் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றும், நலிந்தவர்களுக்கு நல உதவிகள் வழங்க வேண்டும் எனவும் கட்சியினரை ஜி.லோகநாதன் கேட்டுக் கொண்டார். 
    வேளாண்மைக் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் எஸ்.எல்.எஸ். வனராஜ், டி. கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai