சுடச்சுட

  


  வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 302 மாணவர்களுக்கு எம்எல்ஏ ஆர்.காந்தி சனிக்கிழமை வழங்கினார்.
  விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வன்னிவேடு வி.சி.சக்திவேல்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  மாவட்ட செயற்குழு உறுப்பினர்க.சுந்தரம், வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலாளர் சேஷாவெங்கட், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
  அரக்கோணத்தில்...
  அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 212 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அரக்கோணம் எம்.பி. அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் வழங்கினர். 
  விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.கென்னடி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் மைக்கேல் வரவேற்றார். அதிமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், நகரச் செயலர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  ஆற்காட்டில்...
  ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 444 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் வழங்கினர்.
  விழாவுக்கு பள்ளியின் தாளாளர் வி.எம் ரிஸ்வானுல்லா தலைமை வகித்தார். மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏ.இப்ராஹீம் கல்லுல்லா, மேல்விஷாரம் முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் முஹமத் ஷர்புதீன், தலைமையாசிரியர் கே.இர்ஷாத் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai