சுடச்சுட

  


  நேற்று, இன்று, நாளை என நம் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நற்றமிழ் புலவன் கம்பன் என்று கம்பன் ஆய்வாளர் த.ராமலிங்கம் கூறினார்.
  குடியாத்தம் கம்பன் கழகம் சார்பில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அருந்தமிழ் விழாவில், கம்பனில் மறக்க முடியாததும், மறக்கக் கூடாததும்' என்ற தலைப்பில் அவர் பேசியது: 
  நேற்று, இன்று, நாளை என நம் நல்வாழ்வுக்கு வழிகாட்டியவர் கம்பன். மானுடவியல், பொறியியல், மருத்துவம், அறிவியல், உளவியல், அரசியல் என பல்துறைக்கும் அறிவுரை கூறிய பல்துறை வித்தகன் கம்பன்.
  கம்பனின் சொல் என்றும் நமக்கு வழிகாட்டி நிற்கும். சுடுசரம் நம் வாழ்வில் பின்பற்றக்கூடாத சொல் என்றும், சீதை இலக்குவனை சுடுசொல்லால் சுட்டபோதும் ஒரு நாளும் வெளிகாட்டிக் கொள்ளாத உத்தமனாக திகழ்ந்தான். வாழ்த்தும் சொற்கள் நம்மை வளப்படுத்தும், வழிகாட்டி உயர்ந்த நிலைக்கு மானுடத்தை உயர்த்தும் என்பது கம்பனில் மறக்கக் கூடாதது எனவும், கம்பன் மேடைகளின் பங்கு சமுதாயத்தை எப்படி வளப்படுத்தின என்பது மறக்க முடியாதது என்றார். 
  கோவை கம்பன் கழக இணைச் செயலர் க. முருகேசன், காரைக்குடி கம்பன் கழக இணைச் செயலர் மா.சிதம்பரம் ஆகியோருக்கு கம்பன் மாமணி விருதுகளையும், தமிழறிஞர்கள் எல்.சி.குப்புசாமி, நா.முனிகிருஷ்ணன், சண்முக செங்கல்வராயன், ச.கந்தசாமி, இ.எம்.பிச்சாண்டி ஆகியோருக்கு தமிழ்மாமணி விருதுகளையும் குடியாத்தம் கம்பன் கழக நெறியாளர் கே. ஜவரிலால் ஜெயின் வழங்கினார். 
  நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிறுவனர் ஜே.கே.என். பழனி, செயலர் கே.எம். பூபதி இணைச் செயலர் தமிழ்திருமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  ஒருங்கிணைப்பாளர் பா. சம்பத்குமார் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai