சுடச்சுட

  


  பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல பரோல் கேட்டு வேலூர் மத்திய சிறையில் 15 கைதிகள் விண்ணப்பித்துள்ளனர். 
  வேலூர் மத்திய சிறையில் உள்ள நன்னடத்தைக் கைதிகளை ஆண்டுதோறும் சொந்த ஊருக்குச் சென்றுவர 15 நாள்கள் வரை பரோலில் விடுவிப்பது வழக்கம். இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி 15 கைதிகள் பரோலில் சொந்த ஊருக்குச் சென்றுவர விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 3 முதல் 5 நாள்கள் வரை பரோல் கேட்டு விண்ணப்பித்திருப்பதாகவும், அவற்றைப் பரிசீலனை செய்து தகுதியுள்ள கைதிகள் ஞாயிறு அல்லது திங்கள்கிழமை பரோலில் விடுவிக்கப்படுவர் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai