கல்வி நிறுவனங்களில்சமத்துவப் பொங்கல் விழா

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரி களில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாட ப்பட்டது. 


வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரி களில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாட ப்பட்டது. 
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாணவியருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. கரகம், ஒயிலாட்டம், கிராமியப் பாடல், பொங்கல் பற்றி கானாபாடல் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் சத்தியசீலி, சசிகலா, தேவிபாலா, ஆஷா, சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாதனூர் அருகே பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர். 
குடியாத்தத்தில்...
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் புதுப்பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
குடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள அன்னை இந்திரா காந்தி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை டி.ஹேமலதா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் வி.காளியப்பன், பி.தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிச் செயலர் டி.வாசுதேவன் விழாவைத் தொடங்கி வைத்தார். 
அரக்கோணத்தில்...
அரக்கோணத்தை அடுத்த சயனபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தினரால் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். இதில் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாந்திதிருமால், திமுக பிரமுகர் எஸ்.ஜி.சி.பெருமாள், கிராம பிரமுகர் கண்ணப்பன், சயனபுரம் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் பிரேமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்டம், ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கட்சியின் 134-வது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நகரத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் விருந்து வழங்கினார். 
நகர மூத்த நிர்வாகிகள் எஸ்.எம்.இப்ராஹிம், புலவர் ரங்கநாதன், எஸ்.எம்.முருகேஷ், பி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், சமூகசேவா சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலர் குமரேசன், தலையாசிரியர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவா சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு வழிப்பட்டனர். 
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் விமல்சந்த தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் நித்யா வரவேற்றார். விழாவை முன்னிட்டு காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியைகள் மற்றும் மாணவியர் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக மைதானத்துக்கு வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்து கோபூஜை நடத்தினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் கல்லூரி மாணவியர் சேகரித்த ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தை கல்லூரி நிர்வகத்தினரிடம் வழங்கினர். விழாவில் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com