பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள தளபதி விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் எஸ். பாலாஜி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சத்யா வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக திருத்தணி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த 
100 -க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் குறித்து விளக்கினர்.  பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து இயந்திர மனிதன் கூறுவது போன்று அமைக்கப்பட்ட கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் விநாயகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com