அரசு மருத்துவமனையில் பெண் கைதி அனுமதி
By DIN | Published On : 01st July 2019 01:49 AM | Last Updated : 01st July 2019 01:49 AM | அ+அ அ- |

வேலூர் மகளிர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (40). இவர், தனது மருமகளை வரதட்சனை கேட்டு துன்புறுத்தியது, கொலை செய்ய முயற்சித்தது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, வேலூர் மகளிர் தனிச்சிறையில் கடந்த 26-ஆம் தேதி அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மகாலட்சுமிக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.