80 பவுன் தங்கம் திருடிய வடமாநில இளைஞர் கைது
By DIN | Published On : 01st July 2019 01:46 AM | Last Updated : 01st July 2019 01:46 AM | அ+அ அ- |

வாணியம்பாடியில் நகை பட்டறையில் 80 பவுன் தங்கத்தை திருடி சென்ற வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பூர்பேட்டை பூக்கடை பஜாரில் உள்ள தங்க நகை பட்டறையில் மேற்கு வங்க மாநிலம், ஊப்லி மாவட்டம், துத்கல்மேல்படா பகுதியைச் சேர்ந்த ஷேக்சதாம்உசேன்(27) வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி பட்டறையில் இருந்து 80 பவுன் தங்கத்தை திருடி சென்றாராம். இதன் மதிப்பு ரூ. 19 லட்சம்.
இதையடுத்து பட்டறை உரிமையாளர் சுபாஷ் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஷேக்சதாம்
உசேனை தேடி வந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி முரளி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் நாகராஜ், கார்த்திக், தேசிங்கு, நாசர் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று ஷேக்சதாம்உசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.