விதைப் பந்து திருவிழா: பொதுமக்கள், மாணவிகள் ஆர்வம்

வேலூரில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விதைப் பந்துகளை தயார் செய்தனர். 

வேலூரில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விதைப் பந்துகளை தயார் செய்தனர். 
உலக வெப்பமயமாதலைத் தடுக்க நாடு முழுவதும் மரங்கள் நட்டு பராமரித்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதையடுத்து விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முனைப்புக் காட்டி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அறம்செய் அறக்கட்டளை, குட் டைம் சர்வீஸ் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வேலூரில் விதைப்பந்து திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. பெரியார் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியையொட்டி பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விதைப் பந்துகள் தயார் செய்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அறம்செய் அறக்கட்டளைத் தலைவர் உமாசங்கர் கூறியது:
வரும் 15-ஆம் தேதி வேலூர் சைதாப்பேட்டை முதல் தீர்த்தகிரி வரை உள்ள மலைகளில் விதைப்பந்துகளை தூவ உள்ளோம். இதற்குத் தேவையான விதைப்பந்துகளைத் தயார் செய்ய நடத்தப்பட்ட இந்தத் திருவிழா மூலம் சுமார் 50 ஆயிரம் விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டன. விதைப்பந்துகள் தேவைப்படுவோர் கேட்டுக் கொண்டால், இலவசமாக அளிக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.
2015-ஆம் ஆண்டின் இந்திய வன அறிக்கையின்படி இந்தியாவில் 79.42 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு காடுகள்  உள்ளன. இது மொத்தப் பரப்பளவில் 24.16 சதவீதம். குறைந்துவிட்ட காடுகளின் பரப்பளவை அதிகரிக்க  வேண்டுமானால் மரங்களை நடவேண்டியது அவசியம். வனத்துறை மட்டுமே மரங்களை நட்டு காடுகளை உருவாக்க முடியாது. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் இது சாத்தியமாகும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com