சுடச்சுட

    

    வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 186 மாணவர்களுக்கு திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
    வாணியம்பாடி  நியூ டவுனில் இயங்கி வரும் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் ஜி.தேவராஜன் தலைமை வகித்தார். அதிமுக வார்டு செயலர் உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் பத்மநாபன் வரவேற்றார்.    நிகழ்ச்சியில், நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநர் ஜி. சதாசிவம், 186 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai