பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
"மழை நீர் சேகரிப்பு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.கென்னடி தலைமை வகித்தார். பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் தேதி வரை கண்காட்சியை நாகவேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஷீலா சாமிதாஸ் தொடங்கி வைத்தார். 
இதில் மாணவ மாணவிகள் பல்வேறு வீடுகள், வணிக வளாகங்கள், தொழில்கூடங்கள் மாதிரியை அமைத்து அதில் மழைநீர் சேமிப்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளித்தனர். மேலும் காற்று மாசுபடுதல், புவிவெப்பமயமாதல், மின்கடத்தி, மரபுசாரா எரிசக்தி ஆகியவை குறித்தும் செயல்முறை விளக்கங்களை மாணவ, மாணவிகள் தனித்தனியே அளித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் வில்சன், ஜே.சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com