கர்ப்பிணிகளுக்கு யோகப் பயிற்சி
By DIN | Published on : 11th July 2019 04:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி, திருப்பத்தூரை அடுத்த குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 150 கர்ப்பிணிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமை வகித்தார். பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்றுநரும், மருத்துவருமான கவிதா பங்கேற்று, கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படும் வகையிலான யோகாசனப் பயிற்சி அளித்தார்.
அதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் அளிக்கப்படும் மகப்பேறு சத்துணவுப் பெட்டகம் வழங்கப்பட்டது.