சுடச்சுட

  

  அரக்கோணம் அருகில் தாயாருடன் வசித்து வந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
  கைனூர் ஊராட்சி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா(42). அவரது கணவர் ஜெகதலபிரதாபன் இறந்து விட்டார். ஒரே மகள் தனது கணவருடன் தனியாக வசிக்கிறார். 
  நிர்மலா தனது தாயார் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். அவர்களது வீட்டுக் கதவு புதன்கிழமை நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நிர்மலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதே அறையில் ஒரு மூலையில் அவரது தாயார் படவேட்டம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
  இது குறித்து கைனூர் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று படவேட்டம்மாளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
  நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக  அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படவேட்டம்மாள் கண்விழித்த பிறகே இக்கொலையில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai