கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு

அரக்கோணம் அருகே மர அறுவை ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.


அரக்கோணம் அருகே மர அறுவை ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
பருவமேடு கிராமத்தில் உள்ள மர அறுவை ஆலையில் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சார்-ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் மேலும் மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் அடங்கிய குழுவினர், புதன்கிழமை அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த ஆலையில் 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்ட சார்-ஆட்சியர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 7ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.
அந்த 14 பேரையும் மீட்ட சார்-ஆட்சியர் அவர்களை ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தார். அவர்களின் மறுவாழ்வுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com