சுடச்சுட

  

  உலக அமைதி வேண்டியும், நீர்வளம் பெருகவும் குடியாத்தம்  கோபலாபுரம்  கெங்கையம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குட ஊர்வலம்   நடைபெற்றது.
  தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட  பெண்கள்  பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலம் தரணம்பேட்டை என்.ஜி. செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் தெரு வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம்  நடைபெற்றது. 
  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரா.கார்த்திகேயன், தர்மகர்த்தா  எம்.குப்புசாமி, நாட்டாமை ஆர்.ஜி. சம்பத், திருப்பணிக் கமிட்டி நிர்வாகி ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai