சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே யானை மேல்  அம்மன் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  மேல் வழித்துணையாங்குப்பம் கிராமத்தில்  42-ஆம் ஆண்டு சரஸ்வதி லட்சுமி சமேத திருப்பதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கெங்கை அம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன. ஊர் மக்கள் சார்பில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  தொடர்ந்து குளக்கரையில் இருந்து புறப்பட்டு திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு யானைப் படை சூழ ஆற்றங்கரை நோக்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. மதியம் 1 மணிக்கு மகா  பைரவி யாகம், அன்னதானம், மாலை தீமிதி விழாவும் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai