சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்டத்தில் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் உள்ள 455 பேர் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
  இதில், வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள 1,182 பேரில் வங்கி பாதுகாப்பு தொடர்பாக துப்பாக்கி வைத்துள்ள 246 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 936 பேரில் இதுவரை 481 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். இன்னும்  ஒப்படைக்காமல் உள்ள 455 பேர் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai