திருப்பத்தூருக்கு ஜெயின் துறவிகள் வருகை

சாதுர் மாஸ்ய விரதத்தையொட்டி திருப்பத்தூருக்கு ஜெயின் துறவிகள் வந்துள்ளனர்.

சாதுர் மாஸ்ய விரதத்தையொட்டி திருப்பத்தூருக்கு ஜெயின் துறவிகள் வந்துள்ளனர்.
துறவிகள் நான்கு மாத காலம் மேற்கொள்ளும் நோன்பு, சாதுர் மாஸ்ய விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுசரிப்பதற்காக சென்னையிலிருந்து மணிபிரபாஜி, சுஜுதாஜி, ஆஸ்தாஜி ஆகிய 3 ஜெயின் துறவிகள் திருப்பத்தூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். 
அவர்களுக்கு நகர பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் சங்கத் தலைவர் எம்.மாங்கிலால் ஜெயின், செயலர் பி.பாரஸ்சந்த் ஜெயின், பொருளாளர் ராஜேந்திரகுமார் ஜெயின்,பி.கணேஷ்மல் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இந்தத் துறவிகள் இங்குள்ள ஜெயின் கோயிலில், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், நன்னெறிகள் குறித்து நாள்தோறும் காலை 9 முதல் 10 மணி வரைஉபதேசம் செய்ய உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com