சுடச்சுட

  


  வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலையொட்டி செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
  இத்தொகுதிக்கு மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக 24 மணிநேரமும் ஒரே நேரத்தில் இயங்கும் வகையில் 3 பறக்கும் படைக் குழுக்கள், ஒரு நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. 
  வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கவும் செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை எந்நேரமும் செல்லிடப்பேசி மூலம் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
  செலவினப் பார்வையாளர்கள் விவரம்:  
  வினய் குமார் சிங் - வனத்துறை விருந்தினர் மாளிகை, அறை எண் 2, வேலூர் - 83000 30526.
  ஆர்.ஆர்.என். சுக்லா - வனத்துறை விருந்தினர் மாளிகை, அறை எண் 4, வேலூர் - 83000 30527.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai