சுடச்சுட

  


  ராணிப்பேட்டை முத்துக்கடை நான்கு வழிச் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த உயர் கோபுர மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் 5 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை ராணிப்பேட்டை முத்துக்கடை நான்கு வழிச் சந்திப்பில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயர் கோபுர மின் கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் நொருங்கி சாலையில் சிதறின. இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
  இதையடுத்து ராணிப்பேட்டை போலீஸார், நகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை காலை அங்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த உயர் கோபுர மின் கம்பத்தை அகற்றி, போக்குவரத்தைச் சரி செய்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai