Enable Javscript for better performance
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 14th July 2019 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வேலூர் மக்களவைத் தேர்தலின்போது பதிவாகும் வாக்குகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளன.
    தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முக சுந்தரம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், சார்-ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai