சுடச்சுட

  


  குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரி சமேத வைத்யநாதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் சனிக்கிழமை நடைபெற்றன.
  இதையொட்டி யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. சனிக்கிழமை அதிகாலை திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், 4-ஆம் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
  தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை, 10.30 மணிக்கு சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம், மதியம் பொதுமக்களுக்கு மண விருந்து, மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றன. மகாதேவமலை மகானந்த சித்தர், ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கீதா மந்திர ஆசிரம நிர்வாகி புண்டரீக வரதானந்த சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனரான மருத்துவர் என்.ரமேஷ் நாயுடு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai