Enable Javscript for better performance
அரக்கோணத்தில் 750 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 750 கிலோ நெகிழி பைகளை நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
    அரக்கோணம் நகராட்சியில் நெகிழி பைகள், பொருள்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அரக்கோணம் நகராட்சி ஆணையர் முருகேசனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து ஆணையர் முருகேசன் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அருள்தாஸ் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் நகர போலீஸாருடன் இணைந்து பஜார் பகுதியில் மணியக்கார தெருவில் மொத்த விற்பனைக் கடையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த 100 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தொடர்ந்து பழைய பஜார் தெருவில் இருந்த பூட்டிய கிடங்கில் 400 கிலோ, ராஜாபாதர் தெருவில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்தனர். 
    இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் அருள்தாஸ் கூறுகையில், இக்கடையின் விற்பனையாளருக்கு ஏற்கெனவே இரு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து நெகிழி பைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு நகராட்சி ஆணையரின் உத்தரவு பெற்று அதிக அளவு அபராதம் விதிக்கப்படும் என்றார். 
    பறிமுதல் செய்யப்பட்ட 750 கிலோ நெகிழி பைகள் மற்றும் பொருள்கள் நகராட்சி கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai