Enable Javscript for better performance
ஆவணம் இன்றி காரில் எடுத்து வந்த ரூ. 32 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ. 32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
    வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்டுச் சாலை பகுதியில் தேர்தல் பறக்கும்  படை  அலுவலர் சூரவேல் தலைமையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விஜயன் உள்ளிட்டோர் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டியில் ரூ. 32 லட்சம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருப்பத்தூரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு, வாணியம்பாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நிரப்பக் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தது தெரியவந்ததால் பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai