Enable Javscript for better performance
"ஒவ்வொரு வாக்கும் முக்கியம்'- Dinamani

சுடச்சுட

    

    ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று எண்ணி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்தார். 
    குடியாத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: கடந்த   மக்களவைத் தேர்தலில்     திமுக வெற்றி பெற்றாலும் அவர்கள் கூறிய ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் இப்போது உணர்ந்து விட்டார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், அவரால் தொகுதிக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளையும், தொகுதி மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களையும் பெற்றுத் தர முடியும் என்பதை இப்போது மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.  இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.  இந்தத் தேர்தலே அடுத்து வரும் தேர்தல்களுக்கு அச்சாரமாக அமையும் என்றார் அவர். 
    வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் சு. ரவி தலைமை வகித்தார். குடியாத்தம் ஒன்றியச் செயலர் வி. ராமு வரவேற்றார். மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அமைச்சர்கள் மாஃபா. பாண்டியராஜன், பென்ஜமின், எம்எல்ஏக்கள்  பேசினர்.
    குடியாத்தத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai