Enable Javscript for better performance
கணினி குலுக்கல் முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    கணினி குலுக்கல் முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 25th July 2019 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
    வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட உள்ள 3,732 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,866 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,998 யாருக்கு வாக்களித்தோம் என்ற இயந்திரங்கள் (விவி பேட்) ஆகியவை பேரவைத் தொகுதி வாரியாக அனுப்புவதற்காக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. 
    தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம், இப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த இயந்திரங்கள் பேரவைத் தொகுதி வாரியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் பெயர் பட்டியல் சின்னங்களுடன் ஒட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai