Enable Javscript for better performance
கூட்டுறவு சர்க்கரை ஆலையைகண்டித்து வாயில் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத வடபுதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தொழிற்சங்க நிர்வாகிகள் ஏஐடியுசி கு. மனோகரன், சிஐடியு இரா.ராஜ்குமார், எல்பிஎப் என்.அமிர்தமுரளி, ஐஎன்டியுசி ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ஜூன் மாத ஊதியம் இதுவரை வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்கக் கோரியும் வாயில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai