Enable Javscript for better performance
தமிழ்நாட்டில் திமுக அலை என்றுமே ஓயாது: துரைமுருகன்- Dinamani

சுடச்சுட

    

    திமுக அலை என்றுமே ஓயாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் தொகுதி திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
    மக்களவைத் தேர்தலின்போது ஏதோ ஒரு அலையில் திமுகவைச் சேர்ந்த 37 பேர் மக்களவை  உறுப்பினர்களாகி விட்டார்கள் என அதிமுகவினர் மேடைகள் தோறும் கூறி வருகின்றனர். இனி எப்போதும் தமிழ்நாட்டில் திமுக அலைதான் வீசும். 
    அதிமுக அமைச்சர்கள் பேரவைத் தொகுதிக்கு 5 பேர் என முகாமிட்டு தேர்தல் பணியாற்றுகின்றனர். திமுகவினர் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் தேர்தல் பணி இருக்க வேண்டும் என்றார்.
    இதைத் தொடர்ந்து அவர் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
    காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலர் த.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். வேலூர் மத்திய மாவட்டச் செயலர் ஏ.பி. நந்தகுமார் வரவேற்றார். எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்), முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    "திமுக-காங்கிரஸ் உறவு சுமுகமாக உள்ளது'
    திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையேயான உறவு சுமுகமாகத்தான் உள்ளது என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
    இதுதொடர்பாக ஆம்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
    அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியில் எம்.பி. பதவி வகித்தபோது வேலூர் தொகுதிக்கு சொல்லும்படியான திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை.
    காங்கிரஸ் கட்சியுடனான உறவு சுமுகமாகத்தான் உள்ளது. தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியுடன் தினமும் பலமுறை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்.  வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றார். 
    ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், நகரச் செயலர் எம்.ஆர்.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    முன்னாள் அமைச்சர் பொன்முடி பிரசாரம் திமுக வேட்பாளர்  டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் நகர் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி புதன்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.வேலூர் எம்எல்ஏ பா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    வாணியம்பாடியில்..
    வாணியம்பாடியை அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் பிரசாரம் மேற்கொண்டார். வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஊராட்சி செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai