Enable Javscript for better performance
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி: சீமான்- Dinamani

சுடச்சுட

    

    திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி: சீமான்

    By DIN  |   Published on : 25th July 2019 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
    வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்  எஸ்.தீபலட்சுமியை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
    தமிழகத்தை திராவிடக் கட்சியினர் அரை நூற்றாண்டு காலம் ஆண்டுவிட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். எனவே தான் அக்கட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுகிறோம்.
    புதிதாக கட்சி தொடங்கும்போது ஊழல், லஞ்சத்தை ஒழித்து மாற்றத்தைக் கொண்டு வருவதாகக் கூறுவர். ஆனால் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்களே கூட்டணி வைப்பர். அவர்களால் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல, அது ஒரு செயல்.
    மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பெரும் பிழையாகி விடும் என கருதியே தனித்துப் போட்டியிடுகிறோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai