Enable Javscript for better performance
நளினியை இன்று பரோலில் விடுவிக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக வியாழக்கிழமை காலை பரோலில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
    நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமைக்குள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நளினியை பரோலில் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து பரோலில் வரும் நளினி, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாத காலம் தங்கியிருந்து ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க இருப்பதும் தெரியவந்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai