Enable Javscript for better performance
மழைநீர் சேகரிக்க ரூ. 45 லட்சத்தில் தடுப்பணைகள்:வேலூரில் மத்திய நீர்மேலாண்மைக் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிக்க ரூ. 45 லட்சத்தில் தடுப்பணைகள்: வேலூரில் மத்திய நீர்மேலாண்மைக் குழு ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை மத்திய நீர்மேலாண்மைக் குழு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ரூ. 45 லட்சம் மதிப்பில் மழைநீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    மத்திய அரசின் ஜலசக்தி அபியான் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம், மழைக்காலங்களில் நீரை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர் மேலாண்மைக் குழு அதிகாரிகள் 17 பேர் வேலூருக்கு புதன்கிழமை வந்திருந்தனர். அவர்கள் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். 
    அப்போது மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அமைக்கப்பட்டுள்ள நீர்செறிவூட்டும் கிணறுகளை அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுவதும் 3 நாள்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
    இதில், தில்லியைச் சேர்ந்த புவன்ஷெட்டி வேலூர் மாநகராட்சி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, சத்துவாச்சாரி வஉசி நகர், மலையடிவாரம், ஓல்டு டவுன், பாரதியார் நகர், இடையஞ்சாத்து ராமலிங்க நகர், காட்பாடி பவானி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை சேகரிக்க மொத்தம் ரூ. 45 லட்சம் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
    மாநகராட்சிப் பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் சீனிவாசன், குடிநீர் வடிகால்வாரிய உதவி துணை நிர்வாக அலுவலர் ராமன், உதவி நிர்வாக அலுவலர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai