Enable Javscript for better performance
ராமதாஸ் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    நெமிலி ஒன்றிய பாமக சார்பில் கட்சி நிறுவனர் ராமதாஸின் 80-ஆவது பிறந்த நாள் விழா சயனபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் சாந்திதிருமால் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் மணிகண்டன், செயலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    சயனபுரம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அருகே கிழக்கு மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாநில மாணவர் சங்கச் செயலர் பிரபு, மாநில இளைஞர் அணி துணை அமைப்புச் செயலர் கோ.ஏழுமலை, மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக்ராஜா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கிராமத்தின் பல இடங்களில் 80 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai