Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
    இதுகுறித்து திருப்பத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பு: வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூரை தனியாக பிரித்து மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. 
    இந்நிலையில், திருப்பத்தூரை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாள்கள் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai