Enable Javscript for better performance
வாக்குப் பதிவு மைய அலுவலர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்குப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
    குடியாத்தம் தொகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியிலும், கே.வி. குப்பம் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு  மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கே.எம்.ஜி.கல்லூரி வளாகத்திலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. 
    இரு பயிற்சி வகுப்புகளிலும் மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். 
    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
    வேலூர் மக்களவைத் தொகுதியில் 1,553 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  இம்மையங்களில் 7,552 அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர் எனவும், பதற்றமானவை  எனக் கண்டறியப்பட்டுள்ள 179 மையங்களில், உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப்  படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார். 
    தேர்தல் பொதுப் பார்வையாளர் சுதம் காதே பந்தரிநாத், உதவித் தேர்தல் அலுவலர் ப. நந்தீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai