தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் வெளியீடு

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமீறல் புகார்களைத் தெரிவிக்க கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமீறல் புகார்களைத் தெரிவிக்க கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தலையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 83000 30529 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமாகவும் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார் தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தாலும் அதையும் இணைத்து அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com