முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
"மு.க.ஸ்டாலின் தவறாக பிரசாரம் செய்து வருகிறார்'
By DIN | Published On : 30th July 2019 07:45 AM | Last Updated : 30th July 2019 07:45 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவறாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை அவர் பேசியது: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார். திமுக ஆட்சியில், துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது அவருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது. மதுரையில் அவரை கத்தியால் குத்த முயற்சி நடந்தது. அப்போது அவருக்கு கருப்பு பூனைப்படை கொடுக்கப்பட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றக் கூடியதை திமுகவினர் வாக்குறுதியாக கொடுக்கின்றனர் என்றார் அவர்.