கல்வி, வேலைவாய்ப்பு புரட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி

வேலூர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில் 34 ஆண்டுகளாகத் தனிப்பெரும் புரட்சியை செய்து வருகிறது வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா
கல்வி, வேலைவாய்ப்பு புரட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி


வேலூர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில் 34 ஆண்டுகளாகத் தனிப்பெரும் புரட்சியை செய்து வருகிறது வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி. வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஏழை, எளிய மாணவர்களும் சிறந்த தொழில் பயிற்சி பெற்று தங்களது எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 34 ஆண்டுகளில் இக்கல்லூரியில் படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் தற்போது உயர் பதவிகள் வகித்து வருகின்றனர்.
வேலூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இயற்கை எழில் சூழ்ந்த, அமைதியான, காற்றோட்டம் நிறைந்த இடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. 
பரந்து விரிந்த நிலப்பரப்பில் கம்பீரமான, மிகப் பெரிய வகுப்பறைகளைக் கொண்ட கட்டடங்கள், நவீன இயந்திரங்கள் கொண்ட ஆய்வகங்கள், தகுதியான ஆசிரியர்கள், மாணவ -மாணவிகளின் அறிவுத் திறனை மேலும் வளர்க்க அதிநவீன நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இக்கல்லூரியில்அமைந்துள்ளன.
மனிதநேயம் மிக்க சமூகசேவகர், ஆன்மிகவாதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் வாய்ந்த வெப்பாலை எம்.எல்.நரசிம்மன், வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளையின் சார்பில் 1985-இல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கினார். இந்தக் கல்லூரி ஏஐசிடிஇ அங்கீகாரத்தையும், தமிழக அரசு தொழில்நுட்ப வாரியத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் (டிசிஇ), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (டிஎம்இ), எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (டிஇஇஇ), எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் (டிஇசிஇ), கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (டிசிஇ) ஆகிய மூன்றாண்டு பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தொழில்கல்வியுடன் சிறந்த வேலை வாய்ப்புகளையும் வளாக நேர்காணல் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அசோக் லேலண்ட், ஏர்டெல், லூக்காஸ் டிவிஎஸ், ஹூண்டாய், டிவிஎஸ், யமஹா, விப்ரோ, பேனசோனிக், ராயல் என்ஃபீல்டு, ஹெச்சிஎல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும்போதே தொழில் சூழ்நிலையை அறிந்து தங்களை தயார் படுத்திக்கொள்ள ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மரக்கன்றுகள் நடுதல், மின்சார சிக்கனம், போலியோ ஒழிப்பு, ரத்த தானம் போன்ற சமூக சேவை, விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.
மேலும், மாணவ, மாணவியர்களிடையே துறை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க மினி புராஜக்ட் குறைந்த செலவில் அனைத்துத் துறை மாணவர்களும் செய்து வருகின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் ஏழை, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையும் பெற்றுத் தரப்படுகிறது. மேலும், என்எஸ்எஸ், ஜேசிஐ கிளப், ரோட்ராக் கிளப், ஆர்ஆர்சி ஆகியவை மூலமாக மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை, நல்லொழுக்கம், நோய் விழிப்புணர்வு, முதலுதவி பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டு வருகிறது.
வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, முதலாமாண்டு மற்றும் துறை வாரியாக செமஸ்டருக்கு தலா ரூ. 10 ஆயிரம், சிறப்பான தேர்ச்சி சதவீதம் அளிக்கும் ஆசிரியர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கல்லூரி நிறுவனரின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாடப்பிரிவு வாரியாக முதல் இரு இடங்களைப் பிடிப்பவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும், விளையாட்டுப் போட்டிகளிலும், தொழில்நுட்பப் போட்டிகளும் இக்கல்லூரி மாணவர்களும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பரிசுகள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இக்கல்லூரிக்கு வந்துசெல்ல பொன்னை, வள்ளிமலை, திருவலம், காட்பாடி, லத்தேரி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, ரத்தினகிரி, ஆரணி, சந்தவாசல், ஒடுக்கத்தூர், அணைக்கட்டு போன்ற பகுதிகளுக்கு கல்லூரிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் ஆண்டிலும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் ஆண்டிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் இக்கல்லூரியை நிர்வகித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com