மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் அ.அசோகன் தலைமை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர்.காந்தி வரவேற்றார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியது: மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த தொகுதி மக்களுக்கு நன்றி. அதேபோல் நமது அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக தற்போதிலிருந்தே பாடுபட வேண்டும் என்றார்.
மாவட்ட துணைச் செயலர்கள் ஏ.கே.சுந்தரமுர்த்தி, என்.ராஜ்குமார், வசந்திரவி, மாவட்டப் பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், எம்எல்ஏவுமான
ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது,  ஜூன் 3-இல் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாதனூர் ஒன்றியத்தில்...
 மாதனூர் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் மாதனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் ப.ச. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.  வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
தீர்மானங்கள்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, மக்களவை மற்றும் பேரவை இடைத் தேர்தல்களில் வெற்றிக்காக  உழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com