ரூ. 2 ஆயிரம் லஞ்சம்: செவிலியர் கைது

வேலூர் அருகே கர்ப்பிணிக்கு மகப்பேறு நிதி வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் அருகே கர்ப்பிணிக்கு மகப்பேறு நிதி வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் அருகே பென்னாத்தூரைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி வினிதா(26). கர்ப்பிணியாக இருந்த இவர் சோழவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து வந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைவாணன், வினிதா தம்பதி முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பித்திருந்தனர். இதில், முதல்மாத நிதியுதவி ரூ. 2 ஆயிரம் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2, 3-ஆவது மாதத்துக்கான உதவித் தொகையை அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றும் லதா (56) வழங்காததுடன், மகப்பேறு நிதி, கணினி பதிவு எண் வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து வினிதா அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 29-ஆம் தேதி குழந்தை பெற்றெடுத்தார். தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் வினிதாவின் பிரசவத்தை இணையத்தில் பதிவு செய்ய ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதற்கான கணினி பதிவு எண்ணை கோரியுள்ளனர். 
அதை கலைவாணன் கேட்டபோது, மீண்டும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லதா ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டராம். இதுதொடர்பாக, கலைவாணன் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனப் பொடி தடவிய ரூ. 2 ஆயிரம் பணத்தை கலைவாணன் செவிலியர் லதாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். அவர் அந்தத் தொகையை பெற்றுக் கொண்டதும் சுகாதார நிலையத்துக்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் உள்ளே சென்று லஞ்சப் பணத்துடன் லதாவை கைது செய்தனர். தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com