Enable Javscript for better performance
ஐடா ஸ்கடர் பள்ளி பொன் விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஐடா ஸ்கடர் பள்ளி பொன் விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

    By DIN  |   Published on : 14th June 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் ஐடா ஸ்கடர் பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி, சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
    இதற்கான விழாவுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இயக்குநரும், ஐடா ஸ்கடர் பள்ளித் தலைவருமான கே.வி.பீட்டர் தலைமை வகித்தார். பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் உறையை சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் கோவிந்தராஜ் வெளியிட பள்ளி முதல்வர் டேனியல் பெற்றுக்கொண்டார்.
    விழாவில், பள்ளித் தாளாளர் வினுமோசஸ்,  நிறுவனத் தலைவர் சகரியா, முன்னாள் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai