சுடச்சுட

  

  கடந்த 7 ஆண்டுகளில் அரக்கோணம் காவல், தீயணைப்புத் துறைக்கு ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ சு.ரவி

  By DIN  |   Published on : 14th June 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் டிஎஸ்பி எல்லைக்குட்பட்ட காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 12.12 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.
  அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் குடியிருப்புக்காக ரூ. 70.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 
  புதிய கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கேற்றி எம்எல்ஏ சு.ரவி பேசியது: 
  2011-ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்றதில் இருந்து இதுவரை அரக்கோணம் பகுதியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு ரூ. 12.12 கோடியில் பல புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. தக்கோலம் காவல் நிலையத்துக்கு ரூ. 37.56 லட்சத்தில் புதிய கட்டடம், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ரூ. 23.94 லட்சத்தில் புதிய கட்டடம், அரக்கோணம் காவலர் குடியிருப்புக்கு ரூ.6.89 கோடியில் புதிய கட்டடங்கள், தீயணைப்பு அலுவலர்கள் குடியிருப்புக்கு ரூ. 2.12 கோடியில் புதிய கட்டடங்கள், தீயணைப்பு நிலையத்துக்கு ரூ. 93.18 லட்சத்தில் புதிய கட்டடம், அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்துக்கு ரூ. 86.2 லட்சத்தில் புதிய கட்டடம், டிஎஸ்பி அலுவலக மற்றும் குடியிருப்புக்காக ரூ. 70.48 லட்சத்தில் புதிய கட்டடம் என அரக்கோணம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் மட்டும் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு ரூ. 12.12 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் தீயணைப்பு நிலையம், கிராமிய காவல் நிலையக் கட்டடங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன என்றார்.
  அரக்கோணம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் இளம்பகவத், காவலர் வீட்டுவசதி கழக உதவி செயற்பொறியாளர் இளங்கோ, அதிமுக மாவட்ட பாசறை துணைத் தலைவர் ஷியாம்குமார், நகரச் செயலர் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai