திருப்பத்தூரில் கனமழை
By DIN | Published On : 14th June 2019 06:37 AM | Last Updated : 14th June 2019 06:37 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் வியாழக்கிழமை கன மழை பெய்தது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் அக்னி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில், திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதேபோல் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.