ஐடா ஸ்கடர் பள்ளி பொன் விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

வேலூர் ஐடா ஸ்கடர் பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி, சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

வேலூர் ஐடா ஸ்கடர் பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி, சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதற்கான விழாவுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இயக்குநரும், ஐடா ஸ்கடர் பள்ளித் தலைவருமான கே.வி.பீட்டர் தலைமை வகித்தார். பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் உறையை சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் கோவிந்தராஜ் வெளியிட பள்ளி முதல்வர் டேனியல் பெற்றுக்கொண்டார்.
விழாவில், பள்ளித் தாளாளர் வினுமோசஸ்,  நிறுவனத் தலைவர் சகரியா, முன்னாள் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com