தலைகவசம் அணியாத 490 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

திருப்பத்தூரில் தலைக்கவசம் அணியாத 490 வாகன ஓட்டிகள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் வசூலித்தனர்.

திருப்பத்தூரில் தலைக்கவசம் அணியாத 490 வாகன ஓட்டிகள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் வசூலித்தனர்.
திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மதனலோகன் தலைமையிலான போலீஸார் புதுப்பேட்டை சாலை, சேலம்-தருமபுரி இணைவுச் சாலைகளில் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அபராதம் வசூலித்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் மதனலோகன் தினமணி செய்தியாளரிடம் கூறியது:
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், கார், வேன் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் காவல்துறை சார்பில் கடந்த வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  அதையும் மீறி தலைக்கசவம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.  தலைக்கவசம் அணியாத 490 பேரிடமும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களிடம் தலா 100 ரூபாயும், வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்காதவர்களிடம் 600 ரூபாயும் அபராதமாகப் வசூலிக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் ரூ. 7 ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com