பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக 24 தொகுப்பு வீடுகள்: ஆட்சியர் தகவல்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக வேலூர் மாவட்டம், அம்முண்டியில் 24 தொகுப்பு வீடுகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக வேலூர் மாவட்டம், அம்முண்டியில் 24 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார். 
மாற்றுத் தினறாளிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது: மாற்றுத் திறனாளிகளின் குறைகளைப்போக்கும் வகையில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. புதன்கிழமை திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அலுவலகத்திலும், வியாழக்கிழமை ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் அலுவலகத்திலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்காமல் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே முகாம்களை நடத்தி அவர்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக காட்பாடியை அடுத்த அம்முண்டி பகுதியில் 24 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க ஆவண செய்யப்படுகிறது. வீட்டு மனைப் பட்டா கேட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் தகுதியானவர்களாக இருந்தால் வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. 
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com