Enable Javscript for better performance
ரூ. 56 ஆயிரம் லஞ்சம்:  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ. 56 ஆயிரம் லஞ்சம்:  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

    By DIN  |   Published On : 22nd June 2019 07:13 AM  |   Last Updated : 22nd June 2019 07:13 AM  |  அ+அ அ-  |  

    மனை வரன்முறை செய்ய ரூ. 56 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரக்கோணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனைகள் வரன்முறைப்படுத்தும் பிரிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த ஜீவா (57) பணியாற்றி வருகிறார். சென்னையைச் சேர்ந்த முத்துராஜ் அரக்கோணத்தை அடுத்த மோசூரில் 7 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு 172 மனைகள் அமைத்தார். இந்த மனைகளை வரன்முறை செய்ய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவை அணுகியபோது, ஒரு மனைக்கு ரூ. 500 லஞ்சம் கேட்டாராம். இதற்கு முத்துராஜ் மறுத்த நிலையில், மனைக்கு ரூ. 300 பெற்றுக்கொள்ள ஜீவா ஒப்புக்கொண்டாராம். 
    இதுகுறித்து முத்துராஜ் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் போலீஸார், முத்துராஜிடம் ரசாயனம் தடவிய ரூ. 56,600 கொடுத்தனர். 
    இந்நிலையில் ஜீவா, முத்துராஜை அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வரவழைத்து பணத்தைக் கேட்டுள்ளார். அங்கு சென்ற முத்துராஜ் ரூ. 51,600 கொடுத்த நிலையில் மேலும் ரூ. 5ஆயிரம் மோசூர் ஊராட்சி செயலருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு ரூ. 56,600 பணத்தை ஜீவா பெற்றார்.
    அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஜீவாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.  தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலர் ஈஸ்வரன், அலுவலக உதவியாளர் அசோகன் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp