குடிநீர்ப் பிரச்னை: திமுகவினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 12:31 AM | Last Updated : 23rd June 2019 12:31 AM | அ+அ அ- |

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை அடுத்து தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக திமுக சார்பில் வேலூர் அண்ணா சாலையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலர் ஏ.பி.நந்தகுமார், மாநகரச் செயலர் ப.கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
நெமிலியில்...
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றியச் செயலர் பெ.வடிவேலு, மேற்கு ஒன்றியச் செயலர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பவானி வடிவேலு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி பேரூராட்சி செயலர் ஜனார்த்தனன், பனப்பாக்கம் பேரூராட்சி செயலர் சீனிவாசன் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பங்கேற்றனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரப் பொறுப்பாளர் வி.எல்.ஜோதி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மு.கன்னையன், மாவட்ட துணைச் செயலர் ராஜ்குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் விஜயராணி, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பொன் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாலாஜாபேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலர் சேஷா வெங்கட் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் க.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.சி. சக்திவேல் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள்
அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார். தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.