8 ஊராட்சிகளின் குடிநீர்ப் பணிகளுக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு

குடியாத்தம் ஒன்றியத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள 8 ஊராட்சிகளில் குடிநீர்ப் பணிகளை மேற்கொள்ள

குடியாத்தம் ஒன்றியத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள 8 ஊராட்சிகளில் குடிநீர்ப் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் உத்தரவிட்டுள்ளார். 
குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள உள்ளி, கூடநகரம், கீழ்பட்டி, ராஜாகுப்பம், சிங்கல்பாடி, ராமாலை, சேங்குன்றம், டி.பி.பாளையம் ஆகிய 8 ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதாக அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ ஜி. லோகநாதனிடம் முறையிட்டனர். இதுகுறித்து அவர் ஆட்சியர் எஸ்.ஏ. ராமனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 
கோரிக்கை மனு தொடர்பாக குறிப்பிட்ட 8 ஊராட்சிகளில் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். 
ஆய்வின் அடிப்படையில் 8 ஊராட்சிகளிலும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறுகள் பழுதுபார்த்தல், புதிதாக குடிநீர்க் குழாய்கள் அமைத்தல், புதிய மின்மோட்டார் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 14 பணிகள் மேற்கொள்ளவும், அதற்காக ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கி பணிகளை உடனே தொடங்குமாறும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com