ஆம்பூர் அருகே திமுகவினர் மறியல்
By DIN | Published On : 25th June 2019 07:39 AM | Last Updated : 25th June 2019 07:39 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தகராறில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் திமுக சார்பாக கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக அரசை விமர்சனம் செய்து திமுகவினர் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு சென்ற வெங்கடசமுத்திரம் அதிமுகவினர் தங்கள் கட்சியை திமுகவினர் விமர்சனம் செய்ததைக் கண்டித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. தகராறில் ஈடுபட்ட அதிமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி, குடியாத்தம் - உதயேந்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.