சுடச்சுட

    

    திருப்பதியில் 8 சிறார் குற்றவாளிகள் கைது: ரூ.6 லட்சம் பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 26th June 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதியில் 8 சிறார் குற்றவாளிகளை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
    திருப்பதியை அடுத்த ராமச்சந்திராபுரத்தில் அடிக்கடி வீடுகளில் இருந்து பொருள்கள் திருடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திங்கள்கிழமை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 சிறுவர்கள் சந்தேகமளிக்கும் வகையில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
    இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6.34 லட்சம் மதிப்புள்ள 2 விடியோ கேமராக்கள், 4 கேமராக்கள், 4 இருசக்கர வாகனங்கள், 8 இசைக் கருவிகள், 4 தாலிச் சங்கிலிகள் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai